Published : 07 Jan 2019 09:01 PM
Last Updated : 07 Jan 2019 09:01 PM

இலங்கை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் நியமனம்: இதுவே முதல் முறை

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக முதன்முதலில் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசியல் களத்தில் முக்கியமான தருணங்களில் தனது பங்களிப்பை நிகழ்த்திய இலங்கைத் தமிழரான முனைவர் சுரேன் ராகவன் வடக்கு மாகாண புதிய ஆளுநராக இன்று பதவியேற்றார்.

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக முதன்முதலில் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனா முன்னிலையில் அவர் பொறுப்பேற்றார். அவருடன் இலங்கையின்  ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான ஆளுநர்களாக கீர்த்தி தென்னக்கோன் மற்றும் கலாநிதி தம்ம திஸாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டனர்.

இலங்கை வடக்கு மாகாணம் முக்கியமான கேந்திரம் ஆகும். இங்கு ரெஜினோல்ட் குரேவின் என்பவர் ஆளுநராக இருந்தார். இந்நிலையில் அவருக்குப் பின்னர் இந்தப் பதவிக்கு இலங்கைத் தமிழரான முனைவர் சுரேன் ராகவன் வடக்கு மாகாண புதிய ஆளுநராக இன்று பதவியேற்றார். அதிபர் சிறிசேனா தலைமையில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஆளுநர் சுரேன் ராகவன் இங்கிலாந்தின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.  பின்னர், இனத் தேசிய வாதத்தில் மதத்தின் பங்கு என்ற தலைப்பின் கீழ் தனது, தனது முனைவர் பட்ட ஆய்வினை அதே பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

2008 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மடிசன் அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட விருது, மற்றும் கனடாவின் ஆன்டாரியோ மாகாண அரசாங்கம் அவரது கல்விச்சேவையைப் பாராட்டி விருது வழங்கியுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பவுத்த கல்விக்கான ஆக்ஸ்ஃபோர்ட் நிலையத்தில், ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேன், பல ஆண்டுகள் அங்கு  ஆய்வு செய்துள்ளார்.

இலங்கையின் நேரடி அரசியல் விவகாரங்களில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற அவர், இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்புகளுக்கு இடையேயான சமாதான உடன்படிக்கை நேரங்களிலும், இலங்கையின் அரசியல் மறுசீரமைப்பிலும் பங்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றிய, , ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை, மேல் மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் உள்ளிட்ட  இலங்கையின் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நியமித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x