Last Updated : 17 Jan, 2019 08:17 PM

 

Published : 17 Jan 2019 08:17 PM
Last Updated : 17 Jan 2019 08:17 PM

சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை: ஆஸ்திரேலியாவில் பலியான இஸ்ரேலிய மாணவி

ஆஸ்திரேலியாவில் நள்ளிரவில் இஸ்ரேலைச் சேர்ந்த 21 வயது மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அவர் தன் சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை நடந்ததாக போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

 

ஏயா மாசர்வி என்ற அந்த 21 வயதுப் பெண்ணைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

ஏயா மாசர்வியின் உடல் கொலையுண்ட நிலையில் மெல்போர்ன் பல்கலைக் கழக வளாகம் அருகே கிடந்துள்ளது.

 

“இது ஓர் அப்பாவி இளம் பெண் மீது நடத்தப்பட்டுள்ல படுபயங்கரமான படுபாதகச் செயல் அவர் நம் நகருக்கு வருகை தந்துள்ள விருந்தாளி” என்று போலீஸ் உயரதிகாரி ஆண்ட்ரூ ஸ்டாம்பர் செய்தியாளர்களிடம் மெல்போர்னில் தெரிவித்தார்.

 

மெல்போர்ன் லா ட்ரோப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய கல்விப்புல மாணவி ஏயா மாசர்வி. இவர் காமெடி கிளப்பிலிருந்து பந்தூரா புறநகர்ப்பகுதிக்கு ட்ராமில் சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவில் இவர் கொலையாளிகளைச் சந்தித்தார்.

 

வெளிநாட்டில் உள்ள தன் சகோதரியுடன் பேசிக்கொண்டே வரும் போது திடீரென போன் கீழே விழுந்ததும் சிலபல குரல்களும் எதிர்முனையில் உள்ள சகோதரிக்குக் கேட்டுள்ளது.

 

ட்ராமிலிருந்து இறங்கியவுடன் இந்தப் படுகொலை நடந்துள்ளது. காலை 7 மணிக்கு அவ்வழியாக நடந்து செல்பவர்கள் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

பாலியல் பலாத்காரத் தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

 

ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ஏயா மாசர்வியின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x