Published : 19 Sep 2014 09:59 AM
Last Updated : 19 Sep 2014 09:59 AM

உலக மசாலா: படிகளில் உருண்டு விழுந்து விநோத பயிற்சி

குழந்தையின் கிறுக்கல்களை எத்தனைப் பேரால் ரசிக்க முடிகிறது! தன் 2 வயது குழந்தை ஈவ் ஆங்காங்கே கிறுக்கி வைக்க, அவற்றை அழகான ஓவியங்களாக மாற்றி விடுகிறார் ரூத் ஊஸ்டர்மேன். வித்தியாசமான இந்த ஓவியங்கள் நன்றாக விற்பனையாகின்றன. விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் ஈவ் கல்லூரிப் படிப்புக்காகச் சேமிக்கப்படுகிறது என்கிறார் டொராண்டோவில் வசிக்கும் ரூத்.

கிறுக்கினா ஓவியம், பேசினா கவிதையா!

எடை குறைக்க, மன அழுத்தத்தில் இருந்து வெளிவர யார் யாரோ என்னவெல்லாம் செய்கிறார்கள். லி சியாவைப் போல் யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். சீனாவில் உள்ள ஜியான் சங்கில் பூங்காவில் 30 கான்க்ரீட் படிகள் உள்ளன. இந்தப் படிகளில் தானாகவே விழுந்து உருண்டு வருவதுதான் லி சியா செய்யும் உடற்பயிற்சி. இந்தப் பயிற்சி மூலம் தன் உடல் மசாஜ் செய்யப்பட்டதைப் போல உணர்வதாகவும் மன அழுத்தம் குறைவதாகவும் சொல்கிறார்!

ஐயோ… புண்ணுக்கு யாரு வைத்தியம் பார்க்கிறது?

ராஸ் கடலில் இருந்து கொண்டு வரப்பட்ட கணவாய், நியூஸிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 350 கிலோ எடையுள்ள இந்தக் கணவாய், 3.3 மீட்டர் நீளம் கொண்ட 8 கைகளுடன் காட்சியளித்தது. கேப்டன் ஜான் பென்னட்தான் இந்தக் கணவாயைப் பிடித்து, அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தார். 7 ஆண்டுகளுக்கு முன்பு இதை விடப் பெரிய கணவாயையும் இவரே பிடித்து வந்தார். இந்த இரண்டு கணவாய்களும்தான் இதுவரை ஆராயப்பட்ட கணவாய்களில் அதிக எடை கொண்டவை!

எவ்வளவு பெரிய உயிரினமாக இருந்தாலும் இந்த மனுசங்க கண்ணுல இருந்து தப்பிக்க முடியுதா பாருங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x