Published : 29 Jan 2019 10:25 AM
Last Updated : 29 Jan 2019 10:25 AM

இஸ்லாமியர் இஜ்திமா மாநாடு நிறைவு: வெளிநாட்டினர் உட்பட 3 லட்சம் பேர் பங்கேற்பு

திருச்சி அருகே இனாம்குளத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற இஸ்லாமியர் களின் இஜ்திமா மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் வெளிநாட்டினர் உட்பட 3 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இஸ்லாமிய அமைப்புகள் சார் பில் மார்க்க பயிற்சியளிக்கும் வகை யில் இஜ்திமா மாநாடு ஆண்டு தோறும் ஒவ்வொரு மாநிலத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாநாடு தமிழகத் தில், திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டிய இனாம்குளத்தூர் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரம்மாண்ட பந்தல், தங்குமி டம், மின் வசதி, குடிநீர், உணவு தயாரிப்புக் கூடம் உள்ளிட்ட பல் வேறு அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது.

தொடக்க நாளான கடந்த 26-ம் தேதி பஜர் தொழுகைக்குப் பிறகு துஆ-வுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டின் நோக்கம், இறைவனின் கட்ட ளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை பின்பற்றி இஸ்லாமியர் கள் வாழ வலியுறுத்துவதே ஆகும்.

மேலும், மனிதநேயம், நல்லொ ழுக்கம், ஒற்றுமை, ஏழை, எளியோ ருக்கு உதவுதல், ஆதரவற்றோரை அரவணைத்தல் உள்ளிட்டவைகள் குறித்தும், மார்க்க ரீதியிலான விஷயங்களை கடைப்பிடித்தல், இறைத் தொண்டு உள்ளிட்டவை குறித்தும் இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் கருத்துரையாற்றினர்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதி லும் இருந்து வந்திருந்த 3 லட்சம் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தனர். தினமும் 5 வேளை தொழுகை நடைபெற்றது.

மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று சிறப்பு துஆ ஒதப்பட்டு, சிறப்பு சொற்பொழிவுகளுடன் மாநாடு நிறைவடைந்தது.

மாநாட்டு ஏற்பாடுகளை செய்வ தற்காக இளைஞர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, பணி கள் நேர்த்தியாக ஒருங்கிணைக் கப்பட்டிருந்தன.

திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ தலைமையில் 1,500-க் கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x