கொலம்பியாவில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

கொலம்பியாவில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

கொலம்பிய தலைநகர் பகோடாவில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை ஜெனரல் பிரான்ஸிஸ்கோ டி பாவ்லோ சாண்டேன்டெர் ஆபீசர்ஸ் ஸ்கூல் எனப்படும் போலீஸ் அகாடமி மீது கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஸ்பானிய சர்வதேச செய்தி நிறுவனமான எஃபே தெரிவித்தது.

இத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று அதிகாலை 10 என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''எஸ்யூவி லேடன் எனும் காரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இக்குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில், தாக்குதல் தொடுத்தவர் உள்ளிட்டு இதுவரை 21 பேர் மரணமடைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 68 பேர் மாவட்டத்தின் மீட்பு மற்றும் அவசர சேவை உதவியுடன் வேறுபட்ட பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தனர்.

கொலம்பிய அதிபர் இவான் டியூக் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொலம்பியர்கள் பயங்கரவாதத்தை ஒருபோதும் முன்வைக்க மாட்டார்கள், இது விதிவிலக்கு அல்ல, அவர்கள் இத்தகைய பயங்கரவாதத்தால் எங்களை வளைக்க முடியாது. சமுதாயத்தை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களுக்கு ஒரு அடிகூட வழங்கி வழிவிட மாட்டோம். இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டவர்களுக்கு நிச்சயம் கடும் தண்டனை வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் கொலம்பியாவின் போலீஸ் மற்றும் ராணுவப் பயிற்சி மையத்தில் கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியா எல்லையோர நகரான அராவ்கா நகரத்தைச் சேர்ந்த 'ஜோஸ் அல்டெமிர் ரோஜாஸ் ரோட்ரிகியூஸ்' என்ற நபர்தான் இத்தாக்குதலில் ஈடுபட்டு தானும் மடிந்தார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நபர் தனது எஸ்யூவி லேடன் காரில் எடுதது வந்த வெடிகுண்டு 80 கிலோ எடையுள்ள அதிஉயர் ரகத்தைச் சேர்ந்தது. விபத்துப் பகுதியில் ஆய்வு செய்த நிபுணர்கள் ''இது பெரும்பாலும் போர்க்களத்தில் ராணுவத்தினர் சிவிலியன்களில் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுவது'' என்று கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in