

இந்தோனேசியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியில் உள்ள தீவுப்பகுதியான சும்பாவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த் நில நடுக்கம் ரிகடர் அளவுகோலி 6.1 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 25 கிலோ மீட்டர் ஆகும். இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கத்துக்கு சுனாமி தோற்றுவிக்கும் சக்தி இல்லை. எனவே, மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் இந்தோனேசிய கடலடியில் அனாக் கிராக்கதோவ் எரிமலை வெடித்து அதன் லாவா குழம்பு கடல் நீருடன் கலந்ததில் வெளிப்பட்ட ஆற்றலில் சுனாமி ராட்சத அலைகள் தாக்கியது. இதில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.