சீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Updated on
1 min read

சீனாவில் பிரபல சீரியல் கில்லராக  இருந்த காவோ சென்னிங்கோங் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன ஊடகங்கள், ''சீனாவில் 1988-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சீனாவின் பல்வேறு இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக காவோ நீண்ட வருடங்களாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலீஸார் அவரது உறவினர்களின் டிஎன்ஏ மரபணுவை வைத்து காவோ சென்னிங்கோவை  2016-ம் ஆண்டு  சீனாவின் கான்சு மாகாணத்தில் கைது செய்தனர்.

காவோவுக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் சிறையில் காவோவின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது காவோவின் மரண தண்டனையை சீனா வியாழக்கிழமை  நிறைவேற்றியுள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் எந்த முறையில் காவோவுக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து தகவல் ஏதும் சீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in