மெக்ஸிகோ எண்ணெய்க் குழாய் விபத்து: பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

மெக்ஸிகோ எண்ணெய்க் குழாய் விபத்து: பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

மெக்ஸிகோவில் சமூக விரோதிகளால் எண்ணெய்க் குழாய் உடைக்கப்பட்டு தீ விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''மெக்ஸிகோவின் மத்தியப் பகுதியில் உள்ள தல்ஹுலிபன் என்ற நகரில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய்களை வெள்ளிக்கிழமையன்று சமூக விரோதிகள் துளையிட்டு சேதப்படுத்தினர். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் எண்ணெய்த் திருட்டைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் எதிர்வினையாக இந்தச் செயலில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளதாக மெக்ஸிகோ போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலியானவர்களின் உடலுக்கு பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி தங்கள் இரங்கலைப் பதிவு செய்தனர்.

மெக்ஸிகோவில் எண்ணெய்க் குழாய் வெடிப்பு சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. 2010-ம் ஆண்டு இது போன்று எண்ணெய்க் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in