Published : 19 Jan 2019 12:54 PM
Last Updated : 19 Jan 2019 12:54 PM

மெக்சிகோவில் எண்ணெய்க் குழாய் வெடித்ததில் 20 பேர் பலி

மெக்சிகோவில் எண்ணெய்க் குழாய் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு தீ விபத்துக்குள்ளானதில்  20 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து அந்நாட்டு அரசு ஊடகங்கள், ''மெக்சிகோவில் மத்தியப் பகுதியில் உள்ள திருடர்கள் எண்ணெய்க் குழாயை உடைத்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழாய் வெடித்த இடத்தில் எண்ணெய் அருவி போன்று வெளியேறி வருவதால் உள்ளூர் வாசிகள் அதனைப் பிடித்துச் செல்கின்றனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

உடைந்த எண்ணெய்க் குழாயை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும், ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழு உதவி அளிக்கும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

மெக்சிகோவில் இம்மாதிரியான சம்பவம் நடப்பது இது முதல்முறையல்ல. 2010 ஆம் ஆண்டு இது போன்று எண்ணெய்க் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x