

ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''ஆப்கானிஸ்தானில் வடக்குப் பகுதியில் பதக்ஷான் மாகாணத்தில் உள்ள கொஹிஸ்தான் பகுதில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது.
இதில் அப்பகுதி கிராமத்தினர் 220 அடி ஆழத்திற்குச் சென்று தங்கத்தைத் தேடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 30 பேர் பலியாகினர். இதில் குழந்தைகளும் அடக்கம். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு ஏராளமான கனிம வளங்கள் சார்ந்த சுரங்கங்கள் உள்ளன. அந்தச் சுரங்கங்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், போதிய பராமரிப்பு இல்லாத நிலையிலும் இருப்பதால் அங்கு இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.