Published : 13 Sep 2014 10:14 AM
Last Updated : 13 Sep 2014 10:14 AM

கட்டமைப்பு பணிகளை மின்னணு முறையில் கண்காணிக்க வேண்டும்: மோடி அறிவுரை

கட்டமைப்பு திட்டப் பணிகளை மின்னணு முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார். அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டப் பணிகளை அளிக்குமாறு ரயில்வே அமைச்சரை அவர் கேட்டுக் கொண்டார்.

கட்டமைப்பு பணிகள் நடை பெறும் முக்கிய அமைச்சகங் களான விமான போக்குவரத்து, துறைமுகம், உள்நாட்டு நீரிணைப்பு, ரயில்வே, சாலை போக்குவரத்து, தொலைத் தொடர்பு, மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கப்பட்ட மரபு சாரா எரிசக்தித் துறை ஆகிய துறைகளில் நடைபெறும் பணிகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

ரயில்வே துறையில் நடை பெற்றுவரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, கட்டுமானப் பணிகளில் நடைபெறும் முன்னேற்றங்களை மின்னணு முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கட்டுமானப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதை மேம்படுத்துவதன் மூலம் புதிய உலகைப் படைக்க முடியும், அத்துடன் சிறந்த கட்டமைப்பு வசதிகளை இந்தியாவில் ஏற்படுத்த முடியும் என்றார்.

ரயில்வே துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அந்நிய முதலீடுகளை எந்தெந்த துறைகளில் ஈர்க்கலாம் என்பதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ரயில் திட்டப் பணிகளில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் பங்களிப்பு குறித்து பேசிய மோடி, பொதுத்துறை நிறுவனங்கள், பிற சார்க் நாடுகளுடன் இணைந்தும் செயல்படலாம் என்று குறிப்பிட்டார்.

துறைமுகங்கள் குறித்து ஆய்வு செய்த பிரதமர், சகர்மலா திட்டமானது துறைமுக மேம்பாட்டுதிட்டம் என்று குறிப்பிட்டார். தொலை நோக்கு அடிப்படையில் துறைமுகங்களை இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சர்வதேச வர்த்தகத்துக்கு துறைமுகம் பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

துறைமுக மேம்பாடு மட்டுமின்றி துறைமுகத்தோடு இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எஸ்இஇஸட்), ரயில் இணைப்பு, விமான போக்குவரத்து வசதி, நீர் வழி இணைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தவேண்டும். இதுவே சகர்மலா திட்டமாகும்.

இதில் குளிர் பதன கிடங்கு மற்றும் பொருள் சேமிக்கும் கிடங்குகளுக்கும் இணைப்பு ஏற்படுத்துவதும் அடங்கும். இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி யுள்ளது.

மரபு சாரா எரிசக்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய மோடி, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சூரிய மின்னாற்றல் காரிடார் அமைக்கலாம் என்று ஆலோசனை அளித்தார். அத்துடன் பாலைவனப் பகுதியான ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியிலும் சூரிய மின்னாற்றலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார். பரிட்சார்த்த அடிப்படையில் 5 மெகாவாட் மின்னுற்பத்தி மையங்கள் இரண்டு இப்பகுதியில் அமைக்கப்பட உள்ளன.

திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை 500 நகரங்களில் பொதுமக்கள், அரசு தனியார் (பிபிபி) முறையில் செயல்படுத்துவதன் மூலம் உயிரி எரிசக்தி உருவாக்க முடியும். இதுவும் தொலை நோக்கு திட்டமாகும்.

புதிய சாலை திட்டங்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் போடப்படுவதன் மூலம் இந்தியா குறித்த சர்வதேச நாடுகளின் கணிப்பு முற்றிலுமாக மாறும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு மாதங்களில் அனைத்துத் துறைகளிலும் கணிசமான முன்னேற்றம் எட்டப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x