Last Updated : 12 Jan, 2019 04:22 PM

 

Published : 12 Jan 2019 04:22 PM
Last Updated : 12 Jan 2019 04:22 PM

முதலாம் உலகப் போரில் புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்: பிரான்ஸ் கடற்கரையோரத்தில் வெளியே தெரிந்தது

1917 ஜூலையில் முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட, யுசி-61 நீர்மூழ்கிக் கப்பல் தற்போது அதன் எஞ்சிய பாகங்கள் பிரான்ஸ் கடற்பகுதிகளில் வெளிப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு பிரான்ஸ் துறைமுகமான கலாய்சி அருகே விஸான்ட் மணல் புதைவிலிருந்து இக்கப்பலின் எஞ்சிய பாகங்கள் மேலெழுந்தன. அதன் விவரம் வருமாறு:

முதலாம் உலகப் போரின்போது, ஜெர்மன் நீர்மூகிக்கப்பல் கூட்டுப் படையினரால் தோற்கடிப்பட்டபோது அதில் வெள்ளம் புகுந்ததால் இதன் குழுவினரும் மூழ்கினர். பின்னர் இக்கப்பல் கைவிடப்பட்ட நிலையில் கடலில் தனித்து விடப்பட்டு காலப்போக்கில் கண்டுகொள்ளாத நிலையே தொடர்ந்தது. எனினும் 1930களில் இந் நீர்மூழ்கிக் கப்பல் பெருமளவில் புதையுண்டது.

தற்போது இது ஒரு சுற்றுலாவினரை ஈர்க்கும் இடமாக மாறிவருகிறது. எனினும் உள்ளூர் மேயர், தனியாக அனுமதிக்க முடியாதென்றும் அது ஒரு குழுவினராக மட்டுமே விரைந்து சென்றுவர வேண்டும் என்று எச்சரிக்கிறார்.

இதுகுறித்து விஸாண்ட் நகர மேயர் பெர்னார்டு பிராக் பிபிசிக்கு தெரிவிக்கையில்,

''கடலின் அலைகள் குறைவான பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல் இரு பிரிவுகள் 330 அடிகளில் அதாவது 100 மீட்டர் நீளத்திற்கு தென்படத் தொடங்கின. காற்றடிக்கும் வேகத்தில் கடலின் மணல் புரட்டிப் போடப்படும்போது, அலைகளின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து ஒவ்வொரு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கப்பலின் சிதைந்த பகுதி தெரியத் தொடங்கியது. ஆனால் மீண்டும் ஒரு பலமான காற்று வீசத் தொடங்கினால் அப்பகுதியும் மறைந்துவிடும்'' என்றார்.

 

போரினால் சிதைந்து பூமியில் புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களை யு-போட்ஸ் என அழைக்கின்றனர். முதலாம் உலகப் போரின்போது கூட்டணிப் படைகளால் குறிவைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிக் கப்பல்கள் மூழ்கின.

குண்டுவீசப்பட்டோ, நீருக்குள்ளேயே மூழ்கடித்ததன்மூலமோ இப்போரின்போது குறைந்தபட்சம் 11 எண்ணிக்கையிலான யுசி 61 ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் மூழ்கியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x