Published : 07 Dec 2018 11:50 AM
Last Updated : 07 Dec 2018 11:50 AM

பிரிட்டன் மருத்துவ உலகில் சாதித்த தமிழர்களை கவுரவிக்கும் மாபெரும் விருது விழா: உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு

மருத்துவ உலகில் சாதித்த தமிழர்களின் சாதனைகளை பற்றி உலகறியச் செய்வதற்கான விருது விழா ஒன்றை உலகத் தமிழ் அமைப்பு  பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மணையில் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக  பிரிட்டனில் உள்ள உலகத் தமிழ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘2018-ம் ஆண்டுக்கான  உலகளாவிய சிறப்பு மருத்துவ விருதுகள் வழங்கும்  விழாவை கொண்டாட உள்ளது. அந்த வகையில் கடந்த 70 ஆண்டுகளில்  பிரிட்டனில் மருத்துவத் துறையிலும், பொது சுகாதாரத் துறையிலும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் எனப்படும் NHS மிகப்பலத்தை கொண்டுள்ளது.  நமது நாட்டின்  ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் NHS மேம்படுத்தியுள்ளது.

எனவே இதனை சிறப்பிக்கும் வலையில் ஐரோப்பிய யூனியனில் 24 வது உச்சி மாநாட்டை  கூட்டும் WTO - UK  நிகழ்வில் இந்த மிகச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி  விருது விழாவை பிரம்மாண்டமாக நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரமாண்ட விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 14 -ம் தேதி  பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மணையில்  நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான விழாவிற்கு NHS- ன் பங்குதாரர்கள், ஹெல்த்கேர் நிறுவனங்கள், மருத்து கூட்டமைப்புகள் என அனைவரையும் வரவேற்கிறோம்

இந்த விழாவின் மூலம் மிகத் தனித்துவம் வாய்ந்த இந்தியா - பிரிட்டன் உறவுகளை  மேப்படுத்துவதுடன் பல புதிய வாய்ப்புகளை உருவாகும் என்று நம்பிக்கை கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x