ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷுக்கு இறுதி மரியாதை செலுத்திய பணி நாய்

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷுக்கு இறுதி மரியாதை செலுத்திய பணி நாய்
Updated on
1 min read

மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர்  ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷுக்கு அதிபர்களுக்கான சேவைப்  பணியில் உள்ள நாய் தனது இறுதி மரியாதையை செலுத்தியது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 94. 

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் மறைவைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர்களுக்காக சேவைப் பணியில் உள்ள நாய் தனது இறுதி மரியாதை செலுத்திய புகைப்படத்தை முன்னாள் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக்ராத் தனது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல் முன் சேவை நாய் மிகுந்த சோகத்துடன் அப்புகைப்படத்தில் காணப்படுகிறது.

தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் 41-வது  அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் எச் டபிள்யு புஷ் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார்.  முன்னாள் அதிபர் ஜூனியர் புஷ்ஷுன் தந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in