

2018 -ம் ஆண்டு உலகிலேயே தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
தொலைப் பேசி இல்லாமல் இந்த நவீன உலகில் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில் அதில் வரும் தேவையற்ற அழைப்புகள் சில நேரம் நம்மை எரிச்சலில் தள்ளலாம். அந்தவகையில் இந்த ஆண்டு தேவையில்லாத தொலைப்பேசி அழைப்புகள் வரும் நாடுகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை ட்ரூ காலர் 2 நடத்தியுள்ளது.
இதுகுறித்து ஆய்வு அறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை ட்ரூ காலர் (நம்முடைய மொபைலில் பதிவு செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது, யார் அழைக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் செயலி) வெளியியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கின்படி தேவையில்லா தொலைப்பேசி அழைப்புகள் வரும் நாடுகளில் முதலிடம் பிரேசிலுக்கு கிடைத்துள்ளது. ஒரு தனி நபருக்கு ஒரு மாதத்துக்கு பிரேசிலில் 37 தேவையற்ற கால்கள் வருகின்றன. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் ஒரு தனி நபருக்கு 22 கால்கள் வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் சிலி, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றின் பெரும்பாலன கால்கள் ஆன்லைனில் விற்பனை சார்ந்த நிறுவனங்களிடமிருந்து திரும்ப, திரும்ப வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.