பாகிஸ்தானில் ஏசி வெடித்து தீ விபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏசி வெடித்து தீ விபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு பிம்ஸ் மருத்துவமனையின் தாய் - சேய் நலப் பிரிவில், இன்று காலை ஏசி கம்ப்ரஸர் திடீரென வெடித்துச் சிதறியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து மீட்டபோதிலும், அங்கிருந்த 16 குழந்தைகளில் 15 பச்சிளங் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டது.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து விசாரிக்க கூடுதல் துணை ஆணையர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், குழந்தைகளுக்கு நேர்ந்த இந்த இழப்பு குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஏசி வெடித்து தீ விபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு
Flash Floods: அதென்ன திடீர் வெள்ளப் பெருக்கு? - நேபாளம் அடிக்கடி பேரிடரில் சிக்குவதன் பின்புலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in