Published : 21 Dec 2018 02:16 PM
Last Updated : 21 Dec 2018 02:16 PM

ரஷ்ய அதிபர் புதினுக்கு மீண்டும் திருமணம்?

ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   

66 வயதாகும் ரஷ்ய அதிபர் புதின் அவரது சொந்த விஷயங்களை எப்போது ரகசியமாக  வைத்திருப்பத்தில் வல்லவர். புதினுக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு லியுட்மில்லா புதினா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இவர்களது 30 வருட திருமண பந்தம் கடந்த 2014-ம் ஆண்டு பிரிந்தது. இந்தநிலையில் புதின் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புதினுடன் பத்திரிக்கையாளர் கேட்ட போது, ”விரைவில் மதிப்பிற்குரிய நபர் ஒருவரை ஒருக்கட்டத்தில் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் ஜின்னாஸ்டிக் பிரிவில் பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனை அலினா காபாயிவாவுக்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு தொடர்பு இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால் இதனை புதின் மறுத்தார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு புதின் பதிலளித்திருக்கிறார்.

4வது முறையாக ரஷ்யாவின் அதிபராக உள்ள புதின் அரசியல் பயணம்

கடந்த 1999-ல் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி விளாடிமிர் புதினை பிரதமராக அவர் நியமித்தார்.

1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார்.

2008-ல் பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். இந்த நிலையில் மீண்டும்  4வது முறையாக அதிபராக புதின் பதவி ஏற்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x