மீண்டும் திமிங்கல வேட்டையில் ஈடுபடவுள்ளோம்: அதிர்ச்சியளித்த ஜப்பான்

மீண்டும் திமிங்கல வேட்டையில் ஈடுபடவுள்ளோம்: அதிர்ச்சியளித்த ஜப்பான்
Updated on
1 min read

ஐப்பான் அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் வணிக ரீதியாக திமிங்கலங்களை வேட்டையாடுவதைத் தொடங்க இருப்பதாக தெரிவித்திருப்பது சர்வதேச கடல் வாழ் விலங்குகள் நல அமைப்புகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சிப் பணிகளுக்கு என்ற பெயரில் அண்டார்டிக், வடமேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடு பட்டு வந்தது.

ஆனால், அந்த வேட்டையில் கொல்லப்படும் பெரும்பாலான திமிங்கலங்கள் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்குப் பதில்,  பெரிய உணவு விடுதிகளில் உணவாகப் பரிமாறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து  ஜப்பானின் இந்தத் திமிங்கில வேட்டையைப் பல நாடுகளும் எதிர்த்து வந்தன.

இந்த நிலையில் திமிங்கலங்களைப் பாதுகாப்பது குறித்து  சர்வதேச திமிங்கலப் பிடிப்பு ஆணையம், கடலில் சில அரிதான  திமிங்கல இனங்கள் அழியும் நிலைக்கு வந்ததால் வணிக ரீதியில் திமிங்கலங்களைப் பிடிப்பதை 1986-ம் ஆண்டு தடை செய்தது.

இந்த ஆணையத்தில் ஜப்பானும் உறுப்பினராக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆணையத்திலிருந்து ஜப்பான் வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வணிக ரீதியாக திமிங்கல வேட்டையில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது. இதனை ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் சுகாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜப்பானின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பிரிட்டன் உள்ளிட்ட  நாடுகள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in