Published : 17 Dec 2018 04:05 PM
Last Updated : 17 Dec 2018 04:05 PM

ஐஎஸ் தீவிரவாதிகளை நீதிக்கு முன்னால் கொண்டுவர வேண்டும்: நாடியா முராத்

ஐஎஸ் தீவிரவாதிகளை நீதிக்கு முன்னால் கொண்டுவர வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நாடியா முராத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடியா முராத் பேசும்போது, “ஐஎஸ் பிடியில் சிக்கி உள்ள யாசிதி பெண்களை மீட்பதற்கான முயற்சியில் யாருமே ஈடுபடவில்லை. இராக்கிலும் சரி, சர்வதேச அமைப்பிலும் சரி யாரும் அப்பெண்களைக் காப்பாற்ற வரவில்லை.

இராக்கில் பெண்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களைப் பாலியல் பலாத்காரம் பேசக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். நான் பாலியல் பலாத்காரம் குறித்து உரக்கப் பேசுவேன். ஐஎஸ் குற்றவாளிகளை  நீதிக்கு முன்னால் கொண்டுவர வேண்டும்.

மேலும் அரபு நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிட வேண்டும். அப்போதுதன யாசிதி போன்ற சிறுபான்மையின அமைப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். யாசிதி பெண்கள் அவர்கள் இல்லத்துக்குத் திரும்ப உதவுங்கள். எங்களுடைய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுடன் வாழ அனுமதியுங்கள் “ என்றார்.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கடந்த அக்டோபர் மாதம்  அமைதிக்கான நோபல் பரிசு காங்கோவைச் சேர்ந்த மருத்துவரான டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த நாடியா முராத்துக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

குர்து இன மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத் சிறுபான்மையினரின் சமூகமான  யாசிதி இனத்தைச் சேர்ந்தவர். இராக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் தனது குடும்பத்தை இழந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளனர். பின்னர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐஎஸ் அமைப்பிடமிருந்து தப்பி வந்து தற்போது  ஐஎஸ் பிடியில் உள்ள பெண்களின் நலனுக்காக குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x