Published : 10 Dec 2018 08:18 AM
Last Updated : 10 Dec 2018 08:18 AM

பிரான்ஸில் போராட்டம் தொடருகிறது: நாடு முழுவதும் 1,700 பேர் கைது, 179 பேர் காயம்

பிரான்ஸில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 1,700 பேர் கைது செய்யப்பட்டனர். மோதலில் 179 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்றும் அங்கு போராட்டம் நடைபெற்றது.

பிரான்ஸில் சமீபத்தில் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ம் தேதி தலைநகர் பாரிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானோர் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். பல இடங்களில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப் பட்டன. இதையடுத்து டீசல் வரி உயர்வை நிறுத்தி வைப்பதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார்.

எனினும், மேலும் பல சலுகைகளை அறிவிக்கக் கோரி 8-ம் தேதியும் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதையடுத்து புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஈபிள் டவர், அருங்காட்சி யகங்கள், கடைகள் உள்ளிட்டவை நேற்று முன்தினம் மூடப்பட்டன. அசம்பாவிதங்களைத் தடுக்க பாரிஸில் மட்டும் 8000-க்கும் மேற் பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். பலர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திட்டமிட்டமிடி ‘மஞ்சள் ஜாக்கெட்’ அணிந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை ஒடுக்க போலீ ஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அப்போது போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது. நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1,700 பேரை போலீஸார் கைது செய்தனர். பாரிஸில் மட்டும் 920 பேர் கைதாகினர். மோதலில் 179 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் பிரான்ஸில் நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. எனினும் அருங்காட்சியகங்கள், ஈபிள் டவர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வழக் கம்போல் திறக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்டனர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாரிஸ் நகரில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது” என்றார்.

பெல்ஜியத்துக்கு பரவியது

பிரான்ஸைப் போல மஞ்சள் ஜாக்கெட் அணிந்த நூற்றுக் கணக்கானோர் பெல்ஜியம் தலை நகர் பிரஸல்ஸ் நகரில், அந்நாட்டு பிரதமர் சார்லஸ் மிச்செல் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர்.

இதுபோல நெதர்லாந்திலும் போராட்டம் நடைபெற்றது. எனி னும், போராட்டத்துக்கான காரணம் தெரியவில்லை. பிரான்ஸைப் போல, பெல்ஜியம், நெதர்லாந்தில் எரிபொருளுக்கான வரி உயர்த் தப்படவில்லை. ஆனால், அரசின் தவறான கொள்கைகளைக் கண் டித்து இந்தப் போராட்டம் நடை பெற்றதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x