

அமெரிக்காவின் டெனிஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஸ்ரீநிவாஸ் நாயக். இவர் தெலங் கானா மாநிலம் நல்கொண் டாவைச் சேர்ந்தவர். அமெரிக் காவின் டெனிஸி, மிஸிசிப்பி மாகாணங்களில் கிறிஸ்து மத போதகராக பணியாற்றி வருகி றார். இவர் டெனிஸி மாகாணத் திலுள்ள காலியர்வில்லே நகரில் தனது குடும்பத்தாருடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது மனைவி சுஜாதாவுடன், 2 மாதங் களுக்கு முன்பு தெலங்கானா வுக்கு வந்தார். இவரது குழந்தைகள் ஷரோன் (17), ஜாய் (15), ஆரோன் (14) ஆகி யோர் காலியர்வில்லேவில் படித்து வந்ததால் அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநிவாஸ் நாயக்கின் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண் டாட்டம் நடந்தது. அப்போது வீட்டில் திடீரென தீப்பற்றி மள மளவென பரவியது. சம்பவம் அறிந்ததும் தீயணைப்பு வண்டி கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இந்த விபத்தில் ஷரோன், ஜாய், ஆரோன், அந்த வீட்டில் இருந்த கேரி கவுட்ரியட் என்ற பெண் ஆகிய 4 பேரும் இறந்தனர்.