

இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பாஜக தலைவர்கள் முரளிதர ராவ், விஜய் ஜோலி ஆகியோர் நேற்று பேச்சு நடத்தினர்.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த பேச்சு நடைபெற்றது. இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவிட்டதை பாராட்டிய அவர்கள், மீனவர்களின் படகு களையும் விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண இருநாடுகளிடையே புதிய கடல்சார் கொள்கை உருவாக்கப்பட்ட வேண்டுமென்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடலில் மீன்பிடிப்பது என்பது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. இந்தியாவில் பதற் றத்தை அதிகரிக்கும் இந்த விவகாரத்தை இலங்கை மிகவும் நாசூக்காக கையாள வேண்டுமென்று ராஜபக்சேவிடம் முரளிதர ராவ் வலியுறுத்தினார்.
ஆசிய அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய பொது செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ், பாஜக வெளிநாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜோலி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர்.