அரசு எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்: பாக். பிரதமர் நவாஸ் மீது கொலை வழக்கு

அரசு எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்: பாக். பிரதமர் நவாஸ் மீது கொலை வழக்கு
Updated on
1 min read

பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்ததாகவும், இதனால் அந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி செல்லாது என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின.

நவாஸ் ஷெரீப் பதவி விலக, அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்கள் மிகப் பெரிய அளவில் கலவரமாக வெடித்தன. அப்போது நடந்த மோதலில் 14 பேர் பலியாகினர், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே இந்த கலவரத்தின்போது மோதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைச் சதி என்பது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in