இத்தாலியில் இரவு விடுதியில் தீ விபத்து: 6 பேர் பலி; காயம் 100

இத்தாலியில் இரவு விடுதியில் தீ விபத்து: 6 பேர் பலி; காயம் 100
Updated on
1 min read

இத்தாலியில் இரவு விடுதியில்  ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில், ”இத்தாலியில் உள்ள காரினால்டோ நகரத்தில் உள்ள இரவு விடுதியில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் இருந்த பேப்பர் ஸ்பிரே திடீரென தீப்பிடித்தவுடன் விடுதியில் இருந்த மக்கள் அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கினர்.

இதில் நெரிசிலில் சிக்கி 6 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவட்டர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து சுமார் 1 மணியவில் ஏற்பட்டுள்ளது” என்றார்.

தீ விபத்து ஏற்பட்ட விடுதியில், பிரபல ராப்பர்  சஃபேரா எபஸ்டா கலந்து கொண்டிருக்கிறார், சுமார் 1000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இரவு விடுதியில் கூடியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் கூறும்போது, ”அந்த நிகழ்ச்சி தொடங்க இருந்தது.  நாங்கள் நடனம் ஆடுவதற்குத் தயாராக இருந்தோம். அப்போது புகையும், கருகும்  மணமும் வந்தது. அதனைத் தொடர்ந்து நாங்கள் ஓட ஆரம்பித்துவிட்டோம்” என்றார்.

விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in