பாலஸ்தீனத்தில் 1000 ஏக்கரை உரிமை கொண்டாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தில் 1000 ஏக்கரை உரிமை கொண்டாடும் இஸ்ரேல்
Updated on
1 min read

பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் பெத்லேகம் அருகில் உள்ள 1000 ஏக்கர் நிலத்தை இஸ்ரேல் அரசு உரிமை கோரி உள்ளது.

மேற்கு கரையின் கவாத் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்பு உள்ளது. இதன் அருகில் உள்ள 1000 ஏக்கர் நிலம் இஸ்ரேல் அரசுக்கு சொந்தமானது என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அருகில் உள்ள சூரிப் நகர மேயர் அகமது கூறியபோது, இஸ்ரேல் உரிமை கோரும் இடம் பாலஸ்தீனர்களுக்கு சொந்தமானது, அந்த இடத்தை ராணுவ பலத்தில் அபகரிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

இஸ்ரேல் அரசின் அறிவிப்புக்கு அந்த நாட்டு மனித உரிமை அமைப்பான “பீஸ் நவ்” என்ற அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in