Published : 08 Aug 2014 11:07 AM
Last Updated : 08 Aug 2014 11:07 AM

இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு பிரியாணி வழங்கிய இந்தியப் பெண்

‘இறைச்சி ராணி’ என்றழைக்கப் படும் இந்தியப் பெண் ரீனா புஷ்கரணா காஸா எல்லையில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு பிரியாணி பரிமாறி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.

ரீனா புஷ்கரணா இஸ்ரேலில் தந்தூரி உணவு விடுதிகள் பலவற்றை நடத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக டெல் அவிவ் பகுதியில் வசித்து வருகிறார். ரீனாவின் தந்தை ஓய்வு பெற்ற கர்னல் ஆவார்.

போர் தீவிரமாக நடைபெற் றுக் கொண்டிருந்த கடந்த வாரத் தில் அவர் தனது சமையல் கலைஞர்களுடன் அடுப்பு முதலியவற்றை எடுத்துக் கொண்டு காஸா- இஸ்ரேல் எல்லைப் பகுதிக்குச் சென்றார். அங்கு 400 கிலோ பிரியாணி சமைத்து சுமார் 2,000 இஸ்ரேல் வீரர்களுக்குப் பரிமாறினார். அதில், இந்திய வம்சாவளி யூதர்களும் அடக்கம். இது தொடர்பாக ரீனா கூறும் போது,

“கடந்த வியாழக் கிழமை இப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது, இரு முறை குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க குழிக்குள் பாய்ந்து பதுங்கினோம். ஆனால், எங்களின் முயற்சி இஸ்ரேல் வீரர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத் திருக்கிறது. இந்தப் போரால் ஏராளமான உயிர்கள் பறிபோயுள் ளன. இருதரப்பிலும் நடந்த துயரம் என் இதயத்தை நொறுங்கச் செய்திருக்கிறது. போரில் மாட்டிக் கொண்டிருக்கும் காஸா பகுதி குழந்தைகளுக்குச் சமைக்க விரும்புகிறேன்” என்றார்.

டெல் அவிவ் நகரில் உள்ள பாஜக வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் அமைப்பாளராக ரீனா புஷ்கரணா உள்ளார். மோடி யின் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்றார். டெல் அவிவ் நகரிலுள்ள இவரின் விடுதியான ‘தந்தூரி’ யில், கடந்த 1993-ல் நார்வே மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x