சம்பந்தன் பதவி பறிப்பு; எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச: இலங்கையில் அடுத்த குழப்பம்

சம்பந்தன் பதவி பறிப்பு; எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச: இலங்கையில் அடுத்த குழப்பம்
Updated on
1 min read

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வகித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் பதவி, முன்னாள் பிரதமர் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். முதலில் நாடாளுமன் றத்தை முடக்கினார். சில நாட்களுக் குப் பிறகு நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் தேதி யையும் அறிவித்தார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன்பின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப் பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். இந்த வாக்கெடுப்பை அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில் உள்ளிட்ட 122 எம்.பி.க்கள் கொழும்பு மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 3-ம் தேதி விசாரித்த நீதிமன் றம், மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயல்பட தடை விதித்தது. இதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கையில் கடந்த 2 மாதங்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க  மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா இதனை அறிவித்தார். அதிபர் சிறிசேனாவின் உத்தரவுப்படி இது நடைமுறைப் படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அந்த அடிப்படையில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆனால் இதற்கு சம்பந்தன் மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலில் வெற்றிபெற்றதன் அடிப்படையில் பதவி வழங்காமல் கட்சி மாறி வந்த அவருக்கு பதவி வழங்க்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in