Last Updated : 27 Nov, 2018 06:36 PM

 

Published : 27 Nov 2018 06:36 PM
Last Updated : 27 Nov 2018 06:36 PM

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது தூங்கிய பைலட்

ஆஸ்திரேலியாவின் கடல்வெளியின் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பைலட் தூங்கிக்கொண்டிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான வடமேற்கு டாஸ்மானியா தீவின் டேவோன்போர்ட் நகரிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு பாஸ் ட்ரெயிட் கடல் பகுதியில் கிங் தீவை நோக்கி நடுவானில் பறந்துகொண்டிருந்தபோதுதான் இச்சம்பவம் நடந்துள்ளது.

இவ்விமானம் ஒரு சரக்கு விமானம் ஆகும். இது வார்டெக்ஸ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இரட்டை இறக்கை கொண்ட பிப்பர் 31 நவாஜோ சிப்டெய்ன் ஏர்லைன் விமானம் இது என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது இவ்விமானத்தில் ஒற்றை ஆளாக இந்த பைலட் பறந்துகொண்டிருந்தார்.

மெல்போர்னை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் விமான நிறுவனம் இதுகுறித்து இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:

விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அவர் தற்செயலாகத் தூங்கியுள்ளார். விமானத்தில் இருந்த பைலட்டை தொடர்புகொள்ள முயன்றபோது வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடு செயல்படாமல் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

கிங் தீவை நெருங்குவதற்கு 46 கி.மீ.தொலைவு மட்டுமே இருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதன்பிறகு விமானத்தை மிகவும் பாதுகாப்பாக தீவில் தரையிறக்கிவிட்டார் பைலட்.

பின்னர் இச்சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணையில் அவர் தற்செயலாக  தூங்கிவிட்டதும் தெரியவந்துள்ளது. ஆனால் பைலட் யாரென்று அடையாளங் காணப்படவில்லை.

இவ்வாறு வோர்டாக்ஸ் ஏர்-ஏர்லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x