Published : 19 Nov 2018 08:36 PM
Last Updated : 19 Nov 2018 08:36 PM

உங்கள் தோல்விகளுக்கு பாகிஸ்தானை பலிகடா ஆக்குவதா? - 5 கறார் கேள்விகளுடன் ட்ரம்ப்பை விளாசித் தள்ளிய இம்ரான் கான்

அமெரிக்காவுக்கு பாகிஸ்தானால் எந்த வித நன்மையும் இல்லை, பாகிஸ்தான் என்ன செய்து விட்டது? என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானைத் தாக்க பாக். பிரதமர் இம்ரான் கான் ட்ரம்புக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர் ட்வீட்களில் இம்ரான் கான் பதிலடி கொடுக்கும் போது, “9/11 தாக்குதலில் எந்த ஒரு பாகிஸ்தானியரும் இல்லை இருந்தாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் 75,000 உயிர்களைப் பலி கொடுத்துள்ளது. 123 பில்லியன் டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க உதவி என்பது வெறும் 20 பில்லியன் டாலர்கள்தான்.

எங்கள் பழங்குடியினர் வாழும் பகுதிகள் நாசமானது. லட்சக்கணக்கானோர் வீடிழந்து அகதிகளாகினர். சாதாரண பாகிஸ்தானியரின் ரத்தம் உறிஞ்சப்பட்டது.
 

தொடர்ந்து அமெரிக்காவுக்கு தரை மற்றும் வான்வழி தொடர்பு வசதிகளைப் பாகிஸ்தான் வழங்கி வருகிறது, வேறு எந்தக் கூட்டணி நாடாவது இத்தனை தியாகங்களைச் செய்துள்ளதா?

உங்களுடைய தோல்விகளுக்குப் பாகிஸ்தானை பலிகடாவாக்குவதற்குப் பதிலாக 140,000 நேட்டோ படைகள், 250,000 ஆப்கான் படைகள் ஆப்கான் போரில் 1 ட்ரில்லியன் டாலர்கள் செலவு செய்து தாலிபான்கள் முன்பை விட வலுவாக எழுச்சிபெற்றது எப்படி என்பதை ட்ரம்ப் யோசிக்கட்டும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை விளாசித்தள்ளினார்.

கடந்த செப்டம்ப்ரில் ட்ரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ராணுவ உதவியை நிறுத்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x