Published : 31 Oct 2018 05:20 PM
Last Updated : 31 Oct 2018 05:20 PM

மத நம்பிக்கைக்கு எதிராக பேசிய அசியா 8 ஆண்டுகளுக்கு பின் விடுதலை: பாகிஸ்தானில் கலவரம்

பாகிஸ்தானில் மத நம்பிக்கைக்கு எதிராக நடந்துக் கொண்டதற்காக 8 ஆண்டுகள் தனிமை சிறை தண்டனை அனுபவித்த அசியா பிவி என்ற பெண்ணை விடுதலை செய்து அ ந் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத சுதந்திரதிற்கான மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அசியா தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கதக்கது. அசியாவுக்கு நீதி கிடைத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் சைபுல் முலுக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கிறிஸ்தவரான அசியா தனது சக பணியாளர்களுக்கு தண்ணீர் கொடுக்கும்போது,அவர்கள்  கிறிஸ்தவரிடமிருந்து தாங்கள் தண்ணீர் வாங்க மறுத்ததுடன், அவரை முஸ்லிம் மதத்திற்கு மாறும்படியும்  வற்புறுத்தியதாகவும்,

இதனைத் தொடர்ந்து அசியா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதில் அவர் முகமது நபியை அவமானப்படுத்திவிட்டார் என்று அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் அவருக்கு  மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அசியா தரப்பு மறுத்து வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக அசியா தொடுத்த மேற்முறையீட்டிதால் தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

 

இந்த நிலையில் அசியாவுக்கு விடுதலை வழங்கிய  நீதிபதிகள் கொல்லப்பட வேண்டும் என்று பாகிஸ்தானின் தெரிக் இ லபைக் கட்சி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கட்சி 2011 ஆம் ஆண்டு அசியாவை விடுதலை செய்யுமாறு ஆதரவு குரல் கொடுத்த லாகூர் கவர்னர் சமான் தசீரை கொலைச் செய்த அவரது பாதுகாவலர்களுக்கு ஆதரவு அளித்து தொடக்கப்பட்ட கட்சியாகும்.

சல்மான் ஹசீரை கொலை செய்த பாதுகாவலருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அசியாவின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் பல இடங்களில் வன்முறை நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x