

பப்பூவா கினியாவை சேர்ந்த விமான ஒன்று பசிபிக் கடலில் விழுந்தது. எனினும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ஊடகங்களின் தரப்பில், "பப்பூவா கினியவைச் சேர்ந்த விமானம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை மைக்ரோனேசியா தீவிலிருந்து புறப்பட்டு ஓடுப்பாதையிலிருந்து தவறி பசிபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானம் கடலில் மிதந்தது. இதனைத் தொடர்ந்து விரைவாக வந்த மீட்புப் படையினர் விமானதிலிருந்த பயணிகளை உடனடியாக மீட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அருகிலிருந்த மீனவர்களும் உடனடியாக வந்து பயணிகளை மீட்பதற்கு உதவியதால் பெரும் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டதாகவும், விமானம் விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.