

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாக, இந்தியர் ஒருவருக்கு 18 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தண்டனை பெறும் 6-வது நபர் இவர் என்பது குறிப்பித்தக்கது.
கிருஷ்ணன் சரவணன் என்ற அந்த இளைஞர், கடந்த டிசம்பர் 8-ம் தேதி லிட்டில் இந்தியாவில் கலவரம் நடைபெற்ற பகுதியில் இருந்ததாகவும், பலமுறை காவல் துறை அறிவுறுத்தியும் அவர் அங்கிருந்து செல்லாததால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானதால் கிருஷ்ணன் சரவணனுக்கு 18 வாரம் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.