Last Updated : 30 Nov, 2018 03:07 PM

 

Published : 30 Nov 2018 03:07 PM
Last Updated : 30 Nov 2018 03:07 PM

இலங்கையில் 2 போலீஸார் சுட்டுக்கொலை; விடுதலைப்புலிகள் துணைத் தலைவர் கருணா மீது சந்தேகம்

இலங்கையில் நேற்று இரவு இரு போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், விடுதலைப்புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் கருணாவுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் கிழக்குப்பகுதியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுனித்தீவில் 4 போலீஸார் சோதனைச் சாவடியில் இருந்தனர். அப்போது அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸார் கொல்லப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் துறை அமைச்சர் ரஞ்சித் மதுமா பந்தரா கூறுகையில் “ வவுனித்தீவில் நேற்று இரவு பாதுகாப்பில் இருந்த 4 போலீஸாரில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வடக்குமாநிலத்தைச் சேர்ந்த தமிழர், மற்றொருவர் தென்பகுதியைச்சேர்ந்த சிங்களர். துப்பாக்கிச்சூடு நடந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டணியின் செய்தித்தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், “ வவுனித்தீவில் 2 போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் கருணா மீது சந்தேகம் வருகிறது. இவர் கடந்த 2010 முதல் 2015-ம் ஆண்டுவரை ராஜபக்ச ஆட்சியில் துணை அமைச்சராக இருந்தார்.

இலங்கையில் கடந்த அக்டோபர் மாதம் அரசியல் குழப்பம் ஏற்பட்டபோதுதான் துணிச்சலாக கருணா அம்மான் வெளிவந்து பல்வேறு கருத்துக்களைக் கூறினார். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, கடந்த அக்டோபர் 26-ம் தேதிக்குப்பின், கருணா மற்றும் ராஜகபக்ச மீது கூடுதல் சந்தேகம் வருகிறது.

ராஜகபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டபின், அவரின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட டக்லஸ் தேவானாந்தா தமிழர்கள் வாழும்பகுதியில் பல்வேறு குழப்பங்களை விளைவிக்க முயன்றார், மிரட்டல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாகக் கருணா அக்டோபர் 26-ம் தேதிக்குப்பின், சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு, தமிழ் எம்.பி.க்களை ராஜபக்சே பக்கம் இழுக்க முயன்றார். ஆனால், அது முடியவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோற்றனர்” எனக் குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x