

இஸ்ரேலுடன் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு பாலஸ்தீன தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத் தினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. ஐ.நா. உள்பட சர்வதேச சமூகத்தின் முயற்சியால் அவ்வப்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் அவை தோல்வியில் முடிந்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலுடன் 72 மணி நேர போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு பாலஸ்தீன தலைவர்களுக்கு எகிப்து ஆலோசனை கூறியது. இதனை பாலஸ்தீன தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பாலஸ்தீன மூத்த தலைவர் ஒருவர் கூறியபோது, “இப்போதைய நிலையில் எகிப்து அரசின் போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார். கடந்த ஒரு மாதமாக நீடிக்கும் போரில் இதுவரை 1900 பாலஸ்தீனர்கள் உயிரிழந் துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.