

வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியுள்ளன.
இந்தியக் குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த், அரசு முறைப் பயணமாக ஆஸ்திரே லியா சென்றுள்ளார். அதன்படி, அங்குள்ள சிட்னி நகர விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற அவரை, ஆஸ்தி ரேலிய அமைச்சர்கள், அரசு உயர திகாரிகள் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சிட்னி யில் உள்ள அரசு விருந்தினர் மாளி கையில் ராம்நாத் கோவிந்த் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனை அவரது இல்லத்தில் ராம்நாத் கோவிந்த் நேற்று சந்தித்து பேசினார். அப் போது, இருதரப்பு நல்லுறவு, பாதுகாப்பு விவகாரங்கள், வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங் கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகள் தொடர்பாக 5 ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின. இதில், முதல் ஒப்பந்தமானது, மாற்றுத் திற னாளிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதில் ஒத்துழைப்பு அளிப் பது தொடர்பானது ஆகும்.
இரண்டாவது ஒப்பந்தம், இரு நாடுகள் இடையேயான பரஸ்பர முதலீடுகளை அதிகரிப்பது குறித் தது ஆகும். இந்த ஒப்பந்தத்தில் இஸ் வெஸ்ட் இந்தியா நிறுவனமும், ஆஸ்திரேலியாவின் முதலீட்டு நிறு வனமான ஆஸ்ட்ரேட் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
இவற்றை தவிர, வேளாண் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.