Published : 30 Nov 2018 11:34 AM
Last Updated : 30 Nov 2018 11:34 AM

ஹாங்காங்கில் விபத்து: 5 பேர் பலி; காயம் 32

ஹாங்காங்கில் பேருந்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 32  பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஹாங்காங் போலீஸார் தரப்பில், ”ஹாங்காங் விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையில் பயணிகளுடன் வந்த பேருந்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் ஜன்னலிlலிருந்து பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். 32 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சவுத் சீனா மார்னிங் போச் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பயணி ஒருவர் கூறும்போது, ”திடீரென பேருந்து மீது கார் மோதியது.  நான் தரையில் விழுந்தேன்.  பேருந்துல் இருந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டோம்” என்று தெரிவித்தார்.

ஹாங்காங்கில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் விபத்து என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனவின் சிறப்பு நிர்வாக மண்டலம் என்கிற ‘சுயாட்சி’ அதிகாரம் கொண்ட பகுதியாக ஹாங்காங் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x