Published : 16 Aug 2014 04:44 PM
Last Updated : 16 Aug 2014 04:44 PM

‘செல்ஃபி’க்காகத் தனது கையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட அமெரிக்கப் பெண்மணி

நீங்கள் ஒரு சிறந்த செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ள எந்தளவு முயற்சிப்பீர்கள்? ஏதோ வீட்டில் இருக்கும் அழகு சாதனப் பொருட்களின் உதவியுடன் செல்ஃபி புகைப்படம் எடுப்பீர்கள் அல்லவா?

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதாகும் கிரிஸ்டா ஹன்டர்ஷாட் (Christa Hendershot) என்பவர், செல்ஃபி புகைப்படத்தில் தனது கைகள் அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காகப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

ஹன்டர்ஷாட் தனது நிச்சயதார்த்த மோதிரத்துடன் ஒரு செல்ஃபி எடுக்க, அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் அவர் ஒரு தோலியல் மருத்துவரை அணுகி, தனது கையைப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டு அழகாகிக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போது என் நரம்புகள் அவ்வளவு நீல நிறத்தில் தென்படவில்லை”, என்று தெரிவித்தார்.

தனது கையின் அழகு பற்றி அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்தச் சிகிச்சைக்காக, அவர் 3000 டாலர் செலவழித்துள்ளார்.

இது தொடர்பாக ஹன்டர்ஷாட்டிற்குப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டர் ஏரியல் ஒஸ்டாத் (Ariel Ostad) பேசுகையில், இப்போதெல்லாம் உடம்பில் இருக்கும் குறைபாடுகளைச் செல்ஃபி புகைப்படம் எடுத்துவந்து காட்டுபவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடுக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x