காஸா போர் நிறுத்தம் ஒரு நாள் நீட்டிப்பு: நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்ப்பு

காஸா போர் நிறுத்தம் ஒரு நாள் நீட்டிப்பு: நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்ப்பு
Updated on
1 min read

தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரத்துக்கு நீட்டிக்க இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர, எகிப்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரத்துக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோ வில், பாலஸ்தீன தரப்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைவர் ஆஸம் எல் அகமது கூறும்போது, “பேச்சு வார்த்தை தொடர்வதற்காக, போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளோம். அந்த 24 மணி நேரத்தின் ஒவ்வொரு நொடியையும், நிரந்தர போர் நிறுத்தம் ஏற் படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்வோம்” என்றார்.

தற்காலிக போர் நிறுத்தத்தின் முடிவில், நீடித்த போர் நிறுத்தம் கையொப்பமாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக, இஸ்ரேல், பாலஸ்தீன பிரதிநிதிகள் எகிப்தில் மத்தியஸ்தர் மூலம் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸம் எல் அகமது மேலும் கூறும்போது, “பாலஸ்தீனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக இஸ்ரேல் தாமதப் படுவத்துவதால், பேச்சுவார்த்தை யில் எவ்வித முன்னேற்றமும் இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in