Published : 28 Nov 2018 07:24 PM
Last Updated : 28 Nov 2018 07:24 PM

இந்தியா-பாக். நிரந்தர நட்புறவுடன் திகழ நவ்ஜோத் சிங் சித்து இந்தியப் பிரதமராக வேண்டும்: பாக்.பிரதமர் இம்ரான் பேச்சு

கர்தார்பூர்-குருதாஸ்பூர் வழித்தடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

சீக்கிய யாத்திரிகர்கள் வீசா இல்லாமல் சுதந்திரமாக பாகிஸ்தான் சென்று வர இந்த வழித்தடம் பெரிதும் வழிவகுக்கும் அதன் அடிக்கல் நாட்டு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசும்போது,

“நவ்ஜோத் சிங் ஏன் அங்கு விமர்சிக்கப்படுகிறார் என்று தெரியவில்லை, அவர் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புபவர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நவ்ஜோத் சித்து தேர்தலில் போட்டியிடலாம், அவர் நிச்சயம் இங்கு வெல்வார்.

இந்தியப் பிரதமராக நவ்ஜோத் சிங் ஆனாரென்றால் இருநாடுகளுக்கும் நிரந்தர நட்பு ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

நவ்ஜோத் சித்துவும் இம்ரானை வானளாவப் புகழ்ந்திருப்பது ஆளும் பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பாகிஸ்தானை கடுமையாகச் சாடி இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை ஏற்காத சமயத்தில் இம்ரான் அழைப்பை ஏற்று சித்து அங்கு சென்றிருப்பது பரவலான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இந்நிலையில் இந்தியப் பிரதமராக சித்து ஆகவேண்டுமென்ற இம்ரான் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x