மோடி - அமெரிக்க துணை அதிபர் அடுத்த வாரம் சந்திப்பு
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இந்தியப் பிரதமர் மோடியை அடுத்த வாரம் சிங்கப்பூரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், ''அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நவம்பர் 11 முதல் 18 வரை ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய இருக்கிறார்.
சிங்கப்பூரில் நடக்க உள்ள அமெரிக்க - ஏசியன் உச்சி மாநாட்டில் அதிபர் ட்ரம்ப்பின் வேண்டுகோளுக்கிணங்க பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஆகியோரை மைக் பென்ஸ் சந்திகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இம்மாதிரியான சர்வதேச உச்சி மாநாடுகளில் அமெரிக்க அதிபர்கள் கலந்து கொள்வது வழக்கம் ஆனால் இம்முறை ட்ரம்ப்புக்கு பதிலாக துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்துகொள்ள இருக்கிறார்.
துணை அதிபரை கவுரவப்படுத்தும் நோக்கத்தில் இதனை அதிபர் ட்ரம்ப் செய்திருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
