

சீனாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஜியாங்சு மாநிலத்தில் உள்ள ஓர் உலோகத் தொழிற் சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 65 தொழிலா ளர்கள் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தொழிற்சாலை அமைந்துள்ள குன்ஷன் நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
ஷாங்காய் நகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள குன்ஷன் நகரில், குன்ஷன் ஜோங்ராங் மெட்டல் புராடக்ட்ஸ் கம்பெனிக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இதில் சனிக்கிழமை காலையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வாகன சக்கரங்களுக்கான அச்சு (ஹப்) பாலிஷ் செய்யும் பணி மனையில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனடியாக அப் பகுதி தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத் துக்கு வந்த மீட்புக் குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்கிருந்து 40 தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 100க்கும் மேற்பட் டோர் பல்வேறு மருத்துவமனைக ளில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த விபத்து குறித்து விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் தொழிற்சாலைக்கு முன்பு கூடினர்.
குன்ஷன் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறும்போது, “பெரும்பாலனவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாள் என்பதால் குறைவான மருத்துவர்களே பணிக்கு வந்துள்ளனர். எனவே, மேலும் சில மருத்துவர்களை பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். தீக்காயத்தில் நிபுணத்துவம் பெற்ற பிற மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். காய மடைந்தவர்களில் சிலரை சுஜூ, வுக்சி, ஷாங்காய் மருத்துவமனை களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர் களுக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்யுமாறு செஞ்சிலுவை சங்கத்தின் உள்ளூர் பிரிவு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தொழிற்சாலை யில் மொத்தம் 450 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இது மெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது.