மேற்கத்திய நாடுகளில் அடுத்த 22 ஆண்டுகளில் கார்களின் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டும்: பன்னாட்டு எரிசக்தி முகமை தகவல்

மேற்கத்திய நாடுகளில் அடுத்த 22 ஆண்டுகளில் கார்களின் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டும்: பன்னாட்டு எரிசக்தி முகமை தகவல்
Updated on
1 min read

மேற்கத்திய நாடுகளில் உலக அளவில் கார்களின் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டும், 2040-ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளில் 300 மில்லியன் மின்சார வாகனங்கள் சாலையில் ஓடும் என்று பன்னாட்டு எரிசக்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

உலக கச்சா எண்ணெய்க்கான தேவை பெரிய அளவில் வருங்காலங்களில் குறையும் என்று பன்னாட்டு எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

காரணம், மின்சாரக் கார்கள், மற்றும் திறம்பட்ட எரிபொருள் தொழில்நுட்பம் ஆகியவற்றினால் 2040-ல் பெட்ரோலியப் பொருட்களுக்கான, கச்சா எண்ணெய்க்கான தேவை கடுமையாக குறையும் என்று ஐ.இ.ஏ. என்ற பன்னாட்டு எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 300 மில்லியன் மின்சார வாகனங்கள் 2040ம் ஆண்டு வாக்கில் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும்.  இது கச்சா எண்ணெய் தேவையை நாளொன்றுக்கு 3.3 மில்லியன் பீப்பாய்கள் குறைக்கும்.

மேலும் மின்சாரத்தில் ஓடாத கார்களின் திறன் மேலும் அதி தொழில்நுட்ப ரீதியாக அதிகரிக்கும் போது நாளொன்றுக்கு 9 மில்லியன் பீப்பாய்களுக்கான கச்சா எண்ணெய் தேவையைக் குறைத்து விடும்.

உலக கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி வளரும் நாடுகளிலிருந்து வருவதே. இதில் சீனா, இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஆகவே இங்கு மேலை நாடுகளின் உயர்தர தொழில்நுட்பங்கள் உடனடியாக வர வாய்ப்பில்லாததால் கச்சா எண்ணெய் விற்பனை இங்குதான் அதிகரிக்கும் என்றும் வளர்ந்த நாடுகளில் 2040வாக்கில் நாளொன்றுக்கு 4 லட்சம் பீப்பாய்களுக்கான கச்சா தேவையைக் குறைக்கும்.

அதே போல் மேற்கத்திய நாடுகளில் கார் உபயோகம் இரட்டிப்பாகி  80% தேவை அதிகரித்து 200 கோடி கார்கள் என்ற நிலைக்கு உயரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in