

பிரான்ஸில் தனது ஒரு வயது குழந்தையை அடித்து அதை படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட தந்தை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அழுகையை நிறுத்தாததால் குழந்தையை அடித்ததாகவும், பிறகு வேடிக்கைக்காக குழந்தையின் காயங்களை படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
அந்த நபரின் பேஸ்புக்கில் பதிவேற்றிய குழந்தையின் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்களில் ஒருவர் குழந்தை தாக்கப்பட்டது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து குழந்தையை துன்புறுத்திய நபரின் வீட்டுக் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தையின் தந்தை, தாய் இருவர் மீது குழந்தையை துன்புறுத்திய தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற பயத்தால் குழந்தையை அவர் மோசமாக அடித்தது குறித்து யாரிடமும் கூறவில்லை என்று குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.