ஏழு மாதங்கள் மலேசிய விமான நிலையத்தில் இருந்த சிரிய அகதி

ஏழு மாதங்கள் மலேசிய விமான நிலையத்தில் இருந்த சிரிய அகதி
Updated on
1 min read

விசா காலாவதியாகிவிட்ட நிலையில்  மலேசிய விமான நிலையத்தில் தங்கி இருந்த சிரிய அகதி ஒருவர் 7 மாதங்களுக்குப் பிறகு கனடா அனுப்பி வைக்கப்பட்டார்.

சிரியாவைச் சேர்ந்த ஹசன் அல் கோடார் என்பவர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்தார்.கடந்த மார்ச் மாதம்  வேறு நாட்டுக்குச் செல்ல முயன்ற அவரை மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஹசனின் விசா காலம் முடிந்து விட்டதாகத் தெரிவித்து அவருக்கு அனுமதி மறுத்தனர்.  இதனைத் தொடர்ந்து ஹசன் விமான நிலையத்திலேயே தனித்திருக்கப்பட்டார்.

மேலும், புதிய விசா கிடைக்கும் வரை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார் ஹசன்.  அவர் ஏழு மாதங்கள் வரை விமான நிலையத்திலேயே காலை முதல் இரவு வரையிலான நேரங்களைக் கழித்தார்.  இந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்த வாரம் கனடா சென்றடைந்தார்.

விமான  நிலையத்திலிருந்து ஹசன் வெளியே வர உதவிய  கொலம்பிய முஸ்லிம் சங்கம் கூறும்போது, ”நாங்கள் ஹசனின் பிரசசினைளைக் கவனித்தோம்.  அவர் மலேசிய விமான நிலையத்திலேயே தங்கி இருப்பதாகவும்,வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லாமல் இருக்கிறார் என்றும் எங்களுக்குத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு உதவ ஏற்பாடு செய்தோம்” என்றனர்.

இதனைத் தொடர்ந்து ஹசனின் ஆவணங்கள் தயாராகி அவர் கனடா அனுப்பப்பட்டார்.

37 வயதான ஹசன் மீண்டும் சிரியா செல்ல மறுத்துள்ளார்.

இதுகுறித்து ஹசன் கூறும்போது, ”எனக்கு சிரியா செல்ல விருப்பமில்லை. நான் ராணுவத்தில் சேர விரும்பவில்லை.  நான் முதலில் கனடாவில் இறங்கிய போது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததது.  மீண்டும் சாலைகளில் நடப்பது எனக்கு சாதாரணமான விஷயம் தான். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது சுதந்திரத்தின் சுவாசம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in