Published : 30 Oct 2018 10:12 AM
Last Updated : 30 Oct 2018 10:12 AM

பிரேசிலில் வலதுசாரி; அயர்லாந்தில் இடதுசாரி!

உலகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடான பிரேசிலின் அதிபராகிறார், தீவிர வலதுசாரித் தலைவரான ஜேர் போல்ஸனாரோ. கம்யூனிஸத்தின் தீவிர எதிர்ப்பாளரான இவர், துப்பாக்கித் தடைச் சட்டங்களைத் தளர்த்துவது, போலீஸுக்குக் கட்டற்ற அதிகாரங்களை வழங்குவது என்பன போன்ற கருத்துகளைக் கொண்டவர். 2019 ஜனவரி 1-ல் அதிபராகப் பதவியேற்கத் தயாராகிவரும் இவர், ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். சோஷியல் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட போல்ஸனாரோவுக்கு 55.1% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பிரேசில் கதை இப்படியிருக்க அயர்லாந்தோ, இடதுசாரி அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

முன்னதாக, 2011-ல் நடந்த தேர்தலில் வென்று முதன்முதலில் அதிபரானவர் தன்னுடைய முதல் பதவிக்காலம் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்தார். சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் 56% வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகியிருக்கிறார். இந்தத் தேர்தலின் இன்னொரு விசேஷம், இறை நிந்தனையைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் சட்டத்தை நீக்குவது தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பும் வாக்குப்பதிவுடன் சேர்த்து நடத்தப்பட்டது. அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று 64.85% வாக்களித்திருக்கிறார்கள். கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4% கருக்கலைப்பு தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்று வாக்களித்த நிலையில், இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x