Published : 21 Oct 2018 08:23 AM
Last Updated : 21 Oct 2018 08:23 AM

விழுந்து விழுந்து விளையாடுவோமா?- இணையத்தை ஆட்டிப் படைக்கும் ‘பாலிங் டவுண் சேலஞ்ச்

ஐஸ் பக்கெட், நீலத் திமிங்கலம், மோமோ, கிகி, பிட்னஸ் சேலஞ்ச் என ஏதாவது ஒரு சவால் இணையதளத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.  அந்த வரிசையில் தற்போது "பாலிங் டவுண்' (கீழே விழுதல்) என்ற சவால் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

கடந்த ஆகஸ்டில் ரஷ்யாவில் ‘பாலிங் டவுண் சேலஞ்ச்' அறிமுகமானது. அதாவது பணக்காரர்கள் தங்களின் செல்வ செழிப்பை காட்டும் வகையில் சொந்த விமானத்தின் படிக்கட்டு, சொகுசு காரின் கதவு, சொகுசு படகின் படிக்கட்டு, தனியார் டென்னிஸ் மைதானத்தில் தலைகுப்புற விழுந்து கிடப்பதுபோல புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதை சவாலாக ஏற்று ஏராளமான பணக்காரர்கள் வெவ்வேறு இடங்களில் தரையில் விழுந்து கிடப்பது போன்று விதவிதமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களை நிறைத்தனர்.

இந்த சவால் ஆசியாவில் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் விளையாடப்படுகிறது. சிலர் நாய், பூனைகளை தலைகுப்புற படுக்கச் செய்து வலைதளங்களில் படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

சீனாவில் அபராதம்

சீனாவின் ஷாங்காய் நகரில் அண்மையில் 2 பெண்கள், ‘பாலிங் டவுண்' சவாலுக்காக நடைபாதையில் தலைகுப்புற படுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் இரு பெண்களையும் பிடித்து அபராதம் விதித்தனர். அதே நகரில் சாலையில் காரை நிறுத்தி தரையில் விழுந்து கிடப்பதுபோல புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தம்பதிக்கும் போலீஸார் அபராதம் விதித்தனர்.மாலத்தீவில் தென்னை மரம் ஏறும் தொழிலாளி 'பாலிங் டவுண் சேலஞ்சுக்காக' தரையில் விழுந்து கிடக்கிறார். (அடுத்த படம்) ஒரு பெண் விமான படிக்கட்டில் தவறி விழுந்தது போன்று நடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x