44 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்

44 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்
Updated on
1 min read

உகண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் 44 குழந்தைகளுக்கு தாயாகி அந்நாட்டின் பத்திரிகை பலவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தலைப்பு செய்தியாகி வருகிறார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான மரியம் நபாடன்ஸி  44 குழந்தைகளை பெற்று  அந்நாட்டின் அதிக குழந்தைகளை பெற்ற பெண்மணி என்ற  சிறப்பை பெற்றிருக்கிறார். 

12 வயதில் திருமணமான மரியத்தின் இல்லற வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. கணவர் மூலம் கொடுமையை அனுபவித்து வந்திருக்கிறார்.  ஆறு முறை இரட்டை குழந்தைகளையும், நான்கு முறை மூன்று குழந்தைகளையும், மூன்று முறை நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கிறார்.

தனது 40 ஆண்டு வாழ்வில் 18 ஆண்டுகள் கர்ப்பவதியாகவே கழித்ததாகவும், 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் அனைவரையும் மரியமே வேலைக்கு சென்று காப்பாற்றி வருவதாகவும் உகாண்டா செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் மரியம் தெரிவித்திருக்கிறார்.

மரியத்தின் கருப்பையில் மரபியல் ரீதியாக ஏற்பட்ட மாற்றத்தின் காரணமகவே அவருக்கு அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் உற்பத்தியனாதகாவும் அவற்றை கலைக்க முயன்றால் அவர் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து  தனது 44 குழந்தைக்குப் பிறகு தனது கருப்பையை மரியம் நீக்கிவிட்டார்.

இவரை குறித்து செய்தி வெளியானதிலிருந்து,  வெளிநாடுகளிருந்து பத்திரிகையாளர்கள் அவரை பேட்டி காண வருவதாகவும் இதனால் இவர் பிரபலமாகி வருவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in