Published : 19 Aug 2014 03:32 PM
Last Updated : 19 Aug 2014 03:32 PM

ஆப்பிரிக்க நாடுகளில் 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன

2010ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 1,00,000 யானைகள் வேட்டையாடிக் கொல்லப்பட்டுள்ளன.

ஆசியா மற்றும் சீனாவில் தந்தங்களுக்கு இருந்து வரும் அதிக தேவை காரணமாக யானைகள் ஆப்பிரிக்காவில் கொள்ளை கொள்ளையாக கொல்லப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கென்யாவில் ஒரு குறிப்பிட்ட பூங்காவில் அதிகம் யானைகள் வேட்டையாடப்படுவது தீவிர கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தத்திற்காக சட்டவிரோதமாக வேட்டையாடப்படும் யானைகள் 25%ஆக இருந்தது தற்போது 65% ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை யானைகள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் ஆப்பிரிக்க யானைகள் என்ற ஒரு உயிரியே இருந்த இடம் தெரியாமல் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் பெருகும் மத்தியதர வர்க்கத்தின் தேவைகளுக்காக தந்தம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 1.3பில்லியன் மக்களின் தந்தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் கள்ளச் சந்தையில் தந்தத்தின் விலை கடுமையாக உயர்ந்தவண்ணம் உள்ளது.

தந்தத்திற்கு தற்போது இருக்கும் தேவை பூர்த்தி செய்யப்பட முடியாதது. இப்படியே போனால் யானைகள் இனமே அழிந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் காண்டா மிருகம் வேட்டையாடப்படுகிறது. இவர்கள் பார்வை இன்னமும் யானைகள் பக்கம் திரும்பவில்லை. தான்சானியாவில் கடந்த 3 ஆண்டுகளில் யானைகள் எண்ணிக்கை 40,000-த்திலிருந்து 13,000 ஆக குறைந்துள்ளது.

சீனாவுக்கு உலக அரங்கில் இது பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சீனாவில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டும் பயனில்லாமல் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x