Published : 08 Oct 2018 03:10 PM
Last Updated : 08 Oct 2018 03:10 PM

பேரழிவை தடுக்க இன்னும் 10 ஆண்டுகள்: எச்சரிக்கும் ஐ.நா

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பேரழிவை தடுப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகளே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை  வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

பெருகி வரும் தொழில் வளர்ச்சியின் காரணமாக உலகெங்கிலும் பசுமை இல்லா வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புவியின் வெப்ப நிலை அதிகரித்து பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்வினைகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

இவ்வேளையில் அவற்றுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

அதன் பிரதான கருத்துக்காக இன்னும் 10 ஆண்டுகளில் புவி வெப்பமடைவதை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால் உலக பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவை சத்திக்கும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ. நா வெளியிட்டுள்ள அறிக்கையில். "பூமியை மிகவும் ஆபத்தான புயல்கள், கட்டுபாடற்ற மழை, வெள்ளம்,வறட்சி ஏற்பட புவியின் மேற்பரப்பு வெப்ப நிலை இன்னும் கூடுதலாக 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் போதுமானது.

இதனை கட்டுபடுத்தாவிட்டால் 2030க்குள் பசுமை இல்லா வாயுக்களின்  வெளி யேற்றத்தால் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸை  கடக்க கூடும்.  பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த 50% சதவீதம் வாய்ப்பு உள்ளது. மனித குலம் அடுத்த பத்து ஆண்டுகளில் முக்கியமான கட்டத்தில் உள்ளது.

நமது வாழ்க்கைக்கு ஆதரமாக இருக்கும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் சேதத்தை தவிர்பதற்கு நம்மிடம் குறைந்த அளவிலான வாய்ப்ப்புகளே உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x