Published : 07 Oct 2018 02:08 AM
Last Updated : 07 Oct 2018 02:08 AM

வாஷிங்டனில் பற்றியெரியும் தீ..

`அதிபர் மாளிகையில் உங்களுக்கு நண்பர் வேண்டுமா.. ஒரு நாயை வளருங்கள்..’ என அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன் ஒருமுறை கூறியிருந்தார். அமெரிக்காவின் அதிபர்களுக்கான ஆலோசனை இது.

தற்போது குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கும் ஜனநாயக கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே நடந்து வரும் மோதலைப் பார்த்தால் இது சரியாகத்தான் இருக்குமோ என்ற எண்ணம் வருகிறது. அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நீதிபதி பிரெட் கவனா தொடர்பாக எழுந்துள்ள மோதலைப் பார்த்தால், அமெரிக்க அரசியலின் மோசமான நிலை புரிகிறது.

 சில நேரங்களில் பரிந்துரை செய்த அதிபர்களே தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற்று விடுவார்கள். ஆனால் சில நேரங்களில் யார் என்ன சொன்னாலும் சரி தன்னுடைய வேட்பாளர்களை தொடர்ந்து ஆதரிப்பார்கள். 

நீதிபதி கவனா தற்போது கொலம்பியா மாகாணத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். 36 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் பள்ளியில் படிக்கும்போது, பாலியல் தாக்குதலில் ஈடுபட்

டார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாக்டர் கிறிஸ்டின் பிளேஸி போர்டு என்ற பெண், செனட்டின் நீதித் துறை கமிட்டியில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மேலும் இரண்டு பெண்களும் நீதிபதி கவனாவுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்கள். `நான் நீதிபதியாவதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் செய்யும் சதி இது..’ என கவனா கூறியிருக்கிறார்.  இடதுசாரிகளை மட்டுமல்லாது முன்னாள் அதிபர் கிளிண்டனையும் விமர்சனம் செய்திருக்கிறார். `நீதித்துறை விசாரணை முன்பு பாலியல் புகார் விசாரணைக்கு வரும் என்பதை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை’ எனக் கூறியிருக்கிறார்.

பில் கிளிண்டன் – மோனிகா லெவின்ஸ்கி பாலியல் பிரச்சினையை விசாரித்த கென் ஸ்டார் குழுவில் இளம் வக்கீலாக இருந்த கவானா, மோனிகாவுடன் இருந்த பாலியல் உறவு குறித்த விவரங்களைத் தெரிவிக்கும்படி, கிளிண்

டனிடம் வற்புறுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். நீதிபதி கவனா, ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். நீதித்துறை முன்பு பாலியல் புகார் விவகாரம் 27 ஆண்டுகளுக்கு முன்பே வந்துள்ளது. அனிதா ஹில் என்ற பெண், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட கிளாரென்ஸ் தாமஸ் என்பவர் மீது, தன்னிடம் ஆபாசமாகப் பேசுவதாக பாலியல் புகார் அளித்தார். ஆனாலும் செனட் கூட்டத்தில் தாமஸுக்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் விழுந்தன. அவர் வெற்றி பெற்றார்.

இப்போது நிலைமை மாறி இருக்கிறது. கவானாவுக்கு ஆதரவு அளிக்கும் குடியரசுக் கட்சியின் அரிஸோனா செனட்டர் ஜெப் பிளேக்கை, லிப்டில் சந்தித்த இரண்டு பெண்கள், அவரது முடிவை மாற்றிக் கொள்ளும்படி வலியுறுத்தினர். இதனால் கவானா மீதான புகார் குறித்து எப்பிஐ-யின் விசாரணையை கோரியுள்ளார். 1991-ல்

பாலியல் தொல்லை புகார். 2018-ல்

பாலியல் தாக்குதல் புகார். நீதிபதி கவானாவின் நியமனத்துக்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பதிவானதால், வாக்கெடுப்பில் அவர் வென்றிருக்கிறார். ஆனால் எப்பிஐ-யின் அறிக்கைக்காக வெள்ளை மாளிகை ஆர்வத்துடன் காத்திருக்கிறது.  1991-ல்

அனிதா ஹில், ஆண்கள் மட்டுமே இருந்த அதிலும் வெள்ளையர்கள் மட்டுமே இருந்த கமிட்டியிடம் புகார் அளித்தார். 2018-ல் கிறிஸ்டின் பிளாஸி போர்டு, நான்கு பெண் உறுப்பினர்களைக் கொண்ட (அனைவரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்) கமிட்டியிடம் புகார் தெரிவித்துள்ளார்.குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியினர் மட்டுமல்லாது, அனைத்து அமெரிக்கர்களும் முடிவுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

டாக்டர் தர் கிருஷ்ணசுவாமி எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர். வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x